உள்ளூர் உர உற்பத்தியாளர்களால் நாட்டுக்கு தேவையான அளவு உரத்தினை வழங்க முடியாத காரணத்தால், எதிர்வரும் பருவத்திற்கு (2020/21) தேவையான கரிம உரங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சர்வதேச உர விநியோகஸ்தர்கள் மூலம் தேவையான உரத்தினை பெறுவதற்காக இலங்கை உர நிறுவனம் மற்றும் கொழும்பு வணிக உர லிமிடெட் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட சிறப்பு குழுவினரின் பரிந்துரைகளின் அடிப்படையில் விவசாய அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.