பிரிட்டனில் காலில் விழ தயாராகும் ராஜபக்ச அரசு!

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின்  இடைக்கால அறிக்கையின் காரணிகளை பிரிட்டன் தூதுவருக்குத் தெளிவுபடுத்த அரசு தயாராகி உள்ளதாக வெளி விவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் கீழே,

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள மக்களுக்கு அவர்களது சொந்தகாணிகளை மீள வழங்குவது குறித்த மனிதாபிமான நடவடிக்கைகள் இயன்றளவு முன்னெடுக்க பட்டுள்ளது.

இவை குறித்து சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கும் அபிவிருத்திச் செயற்பாடுகள், காணி விடுவிப்புகள்  தொடர்பில் கடந்த ஜெனிவா மனிதஉரிமைகள் சபை கூட்டத்தொடரில் இலங்கை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

“உயர்நீதிமன்ற நீதியரசர் நவாஸ் தலைமையில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு அதன் ஊடாக சாட்சிகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இதன் இடைக்காலஅறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதில் அவசியமானகாரணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேகாரணிகளை ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன் இலங்கையிலுள்ள பிரிட்டன் தூதுவருக்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என வெளிவிவகார அமைச்சர் தினேஷ்குணவர்தன தெரிவித்தார்.

Exit mobile version