எந்த நேரத்திலும் நாடு முடக்கப்படலாம் – அரச உயர்மட்டத்தில் தீர்மானம்!

நாட்டில் தற்போது தீவிரமடைந்து வரும் கோவிட் தொற்றினால் நிகழும் மரணங்களது எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து செல்கிறது.

மேலும், நாடளாவிய ரீதியில் டெல்டா திரிபு அசுர வேகத்தில் பரவி வருகின்றது.

இந்நிலையில் பயணக் கட்டுப்பாடுகளை அறிவிக்குமாறு அரசுக்கு  பல்வேறு தரப்பினரும் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர்.

நாட்டினை முடக்காது விட்டால் இந்தியாவை போன்றதோர் நிலைமையே இலங்கையிலும் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், நாடு எந்த நேரத்திலும் முடக்கப்படக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version