இலங்கையின் இரத்தினபுரியில் கண்டு பிடிக்கப்பட்ட உலகத்தின் மிகப்பெரிய நீல நிற மாணிக்க கல்லை சீனாவிற்கு கொண்டு செல்வதற்காக தனி ஒரு விமானம் தயார் நிலையில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
சீனாவின், ஷென்காய் நகரில் நடைபெறவுள்ள இரத்தினகல் ஏலம் விடும் நிகழ்விற்காக கொண்டு செல்வதர்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளது.
குறித்த நீலக்கல்லை கொண்டு செல்வதற்காக தனியாக ஒரு விமானம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் போது 25 இரத்தினகல் வர்த்தகர்கள் இதில் இணையவுள்ளனர்.
அதற்குரிய இராஜாங்க அமைச்சர் எனும் ரீதியில் நானும் சீனாவிற்கு செல்வவுள்ளேன்.
இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்ட நீலகல்லின் உரிமையாளரது விருப்பத்திற்கு அமைய விரைவில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த நீலக்கல்லின் பெறுமதியை மதிப்பிடுவதற்கான நடவடிக்கைகள் இப்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
உலகின் மிகப்பெரிய நீலநிற மாணிக்ககல்லான இது குறித்து உலகின் பல நாடுகளும் அவதானத்தை செலுத்தியுள்ளது என்றார்.