மனிதரை போல பல் அமைப்பு கொண்ட விசித்திர மீன்!

மனிதர்களை போல பல் அமைப்பினை கொண்ட விசித்திர மீன் ஒன்றினது புகைப்படம் இணையத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

அமெரிக்காவினது வடகரோலினா மாகாணத்தில், மீனவர் ஒருவரால் பிடிக்கப்பட்ட மீனிற்கு மனிதர்களை போலவே மேல் தாடையிலும், கீழ் தாடையிலும் பற்கள் அமைந்துள்ளது.

இந்த வகை மீனை முதல் முறையாக பார்ப்பதாக இணையதளங்களில் பலரும் ஆச்சரியத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த மீனினது வாய் ஆட்டின் வாயை ஒத்திருப்பதால் இதற்கு ஷீப்ஸ்ஹெட் என பெயர் இடப்பட்டுள்ளது.

இந்தவகை மீன்கள் சுமார் 10 தொடக்கம் 20 அங்குலம் வரை வளர கூடியது. அத்தோடு இவை வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்காவில் காணப்படுகின்றன.

Exit mobile version