தடுப்பூசி ஏற்றுபவர்களுக்கு ஏற்படும் பக்கவிளைவு! ஒத்துகொண்டது கனடா!

பைஸர் தடுப்பூசியினால் Bell’s Palsy எனும் முகதசவாதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக முதல் முதலாக கனடா ஒப்புகொண்டுள்ளது.

அத்தோடு இந்த பக்க விளைவானது மிகஅரிதாகவே ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

முகம் திடீரென உணர்ச்சியற்று போதல், தலைவலி, ஒரு கண்ணை மூட இயலாமை மற்றும் உமிழ்நீர் வெளியேற்றம் என்பன இதன் அறிகுறிகளாக கூறப்படுகிறது.

கனடாவில் மாத்திரம், இதுவரை, தடுப்பூசி போட்டவர்களில் Bell’s Palsy எனும் முகதசவாதம் 311 பேர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இது குறுகிய காலத்தில் குணமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த முகதசவாதம் ஆனது, 206 பேருக்கு பைஸர் தடுப்பூசியாலும், 67 பேருக்கு மாடர்னா தடுப்பூசியாலும், 37 பேர்களுக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியாலும் முகத்தசவாதம் என்ற பக்கவிளைவு ஏற்பட்டுள்ளது.

மாடர்னா தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு அரிதாக முகத்தசவாதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது பைஸர் தடுப்பூசியால் முகத்தசவாதம் என்ற அரிதான பக்கவிளைவு குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கனடா முழுதாகவும் 50 மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் அளிக்கபட்டுள்ளது. இதில் 2,849 பேருக்கு இதய வீக்கம், ஒவ்வாமை, இரத்தம் உறைதல் மற்றும் வலிப்பு ஆகிய தீவிரமான பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தடுப்பூசி ஏற்றப்பட்ட பின்னர் முகத்தசவாதத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை நிலையத்தை நாட வேண்டுமென கனேடிய மக்களிடம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version