உலத்தின் ஏனைய நாடுகளை போல கோவிட் தொற்றின் திரிபு இலங்கையிலும் மிகவேகமாக பரவி வருவதால் அத்தியாவசிய தேவை இன்றி வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாமமென அரசு பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.
இது குறித்து அரசதகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் கோவிட் தொற்றிற்கு உள்ளாவோரில் 1.5 வீதமானவர்கள் உயிரிழப்பதாகவும் அதிக எண்ணிக்கையானவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டுமக்கள் முடிந்தளவு தடுப்பூசியை கொள்வதன் மூலம் ஆபத்தில் இருந்து பாதுகாப்பு பெறமுடியும்.
மக்கள் அதிகளவில் பங்கேற்கும் திருமண நிகழ்வுகள், மரண வீடுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளை முற்று தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு வெளியே செல்லும்போது கட்டாயமாக முகக்கவசங்களை அணியுமாறும், தொற்றா நோய்கள் காணப்பட்டால் பணிநிமித்தம் தவிர வேறு தேவைகளுக்கு வெளியே செல்ல வேண்டாமெனவும் அரச தகவல் திணைக்களத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.