வடக்கு மாகாணத்திற்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட சுமார் 2ஆயிரம் பழுதடைந்த கோழி இறைச்சிகள் எரித்து அழிக்கப்பட்டுள்ளது.
போதுமான அளவு குளிர்பதன் இல்லாமல் கொண்டு வரப்பட்டமையினால் 2000 கிலோகிராம் கோழி இறைச்சியும் பழுதடைந்து காணப்பட்டதாகவும் இதனால் எரித்து அழிக்கப்பட்டதாக வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
குறித்த இறைச்சி ஏற்றிய வாகனத்தினை ஈரபெரியகுளம் பகுதியில் வைத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
அதன்போது குறித்த வாகனத்தில் போதிய அளவு குளிரூட்டி வசதி இல்லாமல் காணப்பட்டமையினால் இறைச்சி பழுதடைந்த நிலையில் காணப்பட்டது.
இவற்றை கைப்பற்றிய சுகாதார அதிகாரிகள் நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த இறைச்சி பாவனைக்கு உதவாது என வவுனியா நீதிமன்றினால் உறுதிபடுத்தப்பட்டதை அடுத்து சுகாதார பரிசோதகர்களால் நேற்று மாலை எரித்து அழிக்கப்பட்டது.