யாழ்ப்பாணத்தில் இப்படியும் நடக்குதா! படுமோசமான செயல்!
தன்னை ஒரு பொலிஸ் அதிகாரியென தெரிவித்து யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள பழக்கடையில் கப்பம் பெற்ற இருவரில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் கீரிமலை நல்லிணக்கபுரத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. மற்றைய சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை 31ம்திகதி அங்குள்ள பழக்கடை வியாபாரி ஒருவரை மிரட்டி, 7 ஆயிரத்து 500 ரூபாய்கு அதிகமான பணத்தை சந்தேக நபர்கள் கப்பமாகபெற்ற நிலையில் , சம்பவம் குறித்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து இது குறித்து பொலிஸ் புலனாய்வு பிரிவினர் விசாரனைகளை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், கப்பம் பெற்ற சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள கடை ஒன்றின் சிசிரிவி கமராவின் பதிவை பெற்ற புலனாய்வு பிரிவினர் இருவரை அடையாளம் கண்டனர். பின் குறித்த நபர்களது புகைப்படங்களை பழக்கடை வியாபாரிகளிடம் கொடுத்து அவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இதனுடன் தொடர்புபட்ட இருவரில் ஒருவர் நேற்று பேருந்து நிலையத்திற்குள் வந்தநிலையில், அங்கிருந்தவர்கள் உடனடியாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவலை வழங்கினர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது சந்தேகநபர் தப்பிக்க முயன்ற நிலையில் அங்கிருந்த இளைஞர்களால் மடக்கிபிடிக்கப்பட்டார்.
இதனை அடுத்து சந்தேகநபரை பொறுபேற்ற பொலிஸ் புலனாய்வு பிரிவினர் குற்றதடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.