நாடு தழுவிய ரீதியில் மீளவும் முடக்கத்தை அமுல்படுத்த கோரிக்கை!

தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினாலும் வைத்தியசாலைகளில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாகவும் நாடு தழுவிய ரீதியில் முடக்கத்தை ஏற்படுத்துமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமையில்  முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

இலங்கையில் மீளவும் கொரோனா பரவல் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ள சூழ்நிலையில் நாடு தழுவிய ரீதியில் முடக்கத்தை  அமுல்படுத்த பல்வேறு தரப்புக்களும் கோரிக்கைகள்ளை  முன்வைத்துள்ளன.

அத்தோடு சில வைத்தியசாலைகளி ஒக்சிஜன் பற்றாக்குறை காணப்படுவதோடு பல வைத்தியசாலைகள் கொரோனா தொற்றாளர்களால் நிரம்பியுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவலின் இப்போதைய நிலைமைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவிட் – 19 தொற்றுக்கு இலக்காகும் நாளாந்த நோயாளர்களது எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் அதிகரிப்பு வேகம்  என்பவை தொடர்பில் ஆராய்ந்து இன்றைய கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் நாடு முழுதும் முடக்கத்தை அமுல்படுத்துவது தொடர்பில் தற்போதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவதளபதி ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அத்தோடு இவ்விடயங்கள் தொடர்பாக இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படுமென அவர் கூறியுள்ளார்.

முடக்கத்தை ஏற்படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் மேலும் பாதிப்படையும் என்பதால், முடக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்க அரசு  ஆர்வம் காட்டிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 2674பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version