கல கலப்பாக நடைபெற்ற திருமண வைபவம் ஒன்று, மரண வீடாக மாறிய சம்பவம் பங்காளதேஸில் இடம்பெற்றுள்ளது.
பங்களாதேஸின் மேற்கு மாவட்டம் ஒன்றில், ஆற்றங்கரை ஓரமாக அமைந்துள்ள பகுதியில் திருமணம் ஒன்று இடம்பெற்றது. இதன்போது எதிர்பாராத விதமாக பலத்த மழை பெய்தது. இதனால் ஓர் இடத்தில் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் ஒதுங்கி இருந்தனர்.
திடீரென எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் அதே இடத்தில் 16பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
அத்தோடு மணமகனுக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
மணப்பெண் அவ்விடத்தில் இல்லாமையினால் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். வங்க தேசத்தில் பெய்து வரும் பருவமழை அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
தென்கிழக்கு மாவட்டமான காக்ஸ்பஜாரில் ஒரு வாரமாக சூறாவளி காற்றுடன் பெய்து வரும் கன மழையால் 20க்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர்.
தெற்காசியாவில் ஆண்டுதோறும் மின்னல்தாக்கி நூற்றுக்கு அதிகமானோர் பலியாகி வருகின்றனர்.