ஒலிம்பிக் பதக்க பட்டியலில் சீனா முதலிடம்!

உலகின் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றான ஒலிம்பிக், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

பதக்கபட்டியலில் ஆரம்பித்த முதல்நாளில் சீனாமுதல் இடத்தில் இருந்தது.

பின்னர் அமெரிக்கா, ஜப்பான் முதலிடம் பிடித்தன. 12வது நாளான இன்று காலை நிலவரப்படி சீனா மீளவும் முதலிடத்தில் உள்ளது.

சீனா 33 தங்கபதக்கம், 21 வெள்ளி, 16 வெண்கலதுடன் 69 பதக்கங்களை பெற்று முதலிடத்திலும்

அமெரிக்கா 25 தங்கம், 29 வெள்ளி, 21 வெண்கலம் மொத்தமாக 75  பதக்கங்களை பெற்று 2வது இடத்திலும்

ஜப்பான் 20 தங்கம் 7 வெள்ளி, 11 வெண்கலம் ஆகியவற்றுடன் 38 பதக்கங்களுடன் 3ம் இடத்திலும் உள்ளன.

14 தங்கம், 4 வெள்ளி, 16 வெண்கலம் ஆகியவற்றுடன் மொத்தம் 36 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 4வது இடம்வகிக்கிறது.

ரஷ்ய ஒலிம்பிக் குழு 13 தங்கம், 21 வெள்ளி, 18 வெண்கலத்துடன் மொத்தம் 52 பதக்கங்களுடன் 5ம் இடத்தில் உள்ளது.

பிரித்தானியா 13 தங்கம், 17 வெள்ளி, 14 வெண்கலம் 44 பதக்கங்களுடன் ஆறாமிடத்திலும்

ஜேர்மனி மொத்தமாக 30 பதக்கங்களைப் பெற்று 7ம் இடத்திலும் உள்ளன.

Exit mobile version