சீனாவின் மீளவும் தீவிரமடையும் கொரோனா! ஊரடங்கு அமுல்!

உருமாறியகொரோனா டெல்டாவைரஸ் பரவலைஅடுத்து சீனாவில் மீளவும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் வுகான்நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசெம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ்தொற்று உலகநாடுகளை உலுக்கி வருகிறது. தொற்றுபாதிப்பு ஏற்பட்டு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும்கூட தொற்றின்வீரியம் குறைந்தபாடில்லை.

கொரோனாவைரஸ் உருமாற்றம் அடைந்து பலஅலைகளாக தாக்கத் தொடங்கியுள்ளது. இதனால், உலகநாடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன.

தற்போதைக்கு தடுப்பூசி யால் மட்டுமே கொரோனாவைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருவதால், தடுப்பூசிபோடும் பணியும் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

சீனாவில் கொரோனாவைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறிவரும் நிலையில் 20 நகரங்களில் டெல்டாவைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வைரஸ்தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் பரிசோதனைநடத்த சீனாமுடிவு செய்துள்ளது. 12 மாகாணங்களில் டெல்டாவைரஸ் பாதிப்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பயணகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வுகான் மாகாணத்தின் ஜூஜென் நகரில் 3 நாள்களுக்கு ஊர டங்கு பிறப்பிக்கப்பட்டு பரிசோதனை நடைபெறுகிறது.

சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு ஏற்கனவே சீனத்தலைநகரான பெய்ஜிங் நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

Exit mobile version