சீனாவில் வெள்ளம், 302 பேர் உயிரிழப்பு!
சீனாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரி ழந்தவர்கள் எண்ணிக்கை 300ஐ தண்டி யுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனா வில் ஆண்டுதோறும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் பெருவெள்ளத்தில் சிக்கி பலர்இறந்து போகின்றனர்.
மேலும் பொருள்களும் அதிகஅளவில் சேதம் அடை கின்றன. இந்த நிலையில், மத்திய யஹனான் மாகா ணத்தில் கடந்த இரண்டு வாரமாக பலத்த ம ழை பெய்து வருகிறது.
வரலாறு காணாத கனமழையால் ஜெங்ஜவ், ஜிங்ஜியாங், எனியாங் மற்றும் யஹபி ஆகிய 4 நகரங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனஎன கூறப்படுகிறது. மேலும்,அதைதவிர பல்வேறு நகரங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், யஹனான் மாகாணத் தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 302ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 50 பேரைத் தேடும்பணி தீவிரமாக நடந்து வரு வதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ள னர்.
ஜெங்ஜோ என்ற இடத்தில் சுரங்கப்பாதையில் வெள்ளநீர் புகுந்ததில் கார் நிறுத் துமிடத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மழை மற்றும் வெள்ளம் காரண மாக ஒருகோடியே 30 லட்சம்பேர் பாதிக்கப்பட் டுள்ளனர் எனவும், 9 ஆயிரத்துக்கும் மேற் பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன எனவும் சீனஅரசு தகவல் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற் பட்டவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட மொத்தப் பாதிப்பு விவரங்கள் தற்போதுவரை வெளியாகவில்லை.