பெண்களை வீட்டுவேலைக்கு அமர்த்தல் மற்றும் வேறுதொழில்களில் இணைக்து கொள்ளும்போது பிரதேசசெயலாளரின் அனுமதியை பெற்று கொள்ளவதை கட்டாயமாக்குவது குறித்து அரசு கவனம் செலுத்தியுள்ளது.
ரிஷாத்பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த 16 வயதுசிறுமி இறந்த சம்பவத்தை அடுத்து சிறுவர்களை வேலைக்கு இணைத்துக் கொள்ளுதல் தொடர்பாக சமூகத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
இந்தவிடயங்களை கருத்தில்கொண்டு எதிர்காலத்தில் இது தொடர்பாக புதியசட்டம் இயற்றப்படும் என மகளிர்மற்றும் சிறுவர்அபிவிருத்தி இராஜாங்கஅமைச்சர் பியல்நிசாந்த தெரிவித்தார்.
அத்தோடு சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்யும் நபர்களுக்கு தண்டனை வழங்க புதியசட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும்கூறினார்.