சீனாவின் வூஹான் நகரத்திலுள்ள ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் கசிந்ததாக அமெரிக்க குடியரசுக்கட்சி எம்.பி.க்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு ஏற்கெனவே எழுந்தநிலையில் அதைசீனா மறுத்துவந்தது. இதை அடுத்து, கொரோனா வைரசின் தோற்றம் குறித்து ஆய்வுநடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அமெரிக்க புலனாய்வு அமைப்புகளுக்கு அந்நாட்டு ஜனாதிபதி பைடன் உத்தரவிட்டுள்ளாா்.
இந்நிலையில், குடியரசுக்கட்சி எம்.பி. மைக்மெக்கால் தலைமையிலான அக்கட்சி எம்.பி.க்கள் ஓா் ஆய்வறிக்கையை திங்கள் கிழமை வெளியிட்டனா்.
அதில், வூஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனாவைரஸ் கசிந்தமைக்கான ஏராளமான சான்றுகள் இருப்பதாகவும் கடந்த 2019, செப்டம்பா் 12ம் திகதிக்கு முன்னரே இது நிகழ்ந்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.