யாழ்ப்பாணத்தில் ஒக்சிஜன் தட்டுப்பாடு!

யாழ்போதனா வைத்தியசாலையில் ஒக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர் சிறிபவானந்தராஜா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்

யாழ்போதனா வைத்தியசாலையில் தினமும் 120 ஒக்சிஜன் சிலிண்டர்கள் வரை பாவிக்கப்பட்டு வந்தநிலையில், கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தமையால் சிலிண்டர் பாவனை 180ற்கு மேல் அதிகரித்துள்ளது.

தினமும் யாழ்போதனா வைத்தியசாலை வாகனங்கள் அனுராதபுரத்திற்கு 3 தடவைக்கு மேல் சென்று சிலிண்டர்கள் பெற்று வருகின்றன.

யாழ்ப்குடாநாட்டில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையால், வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கோப்பாய் சிகிச்சை நிலையத்திலும் தொற்றாளர்கள் அதிகளவில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். எனவே தற்போதுள்ள மருத்துவவளங்கள் அனைத்தும் கொரோனா தொற்றாளர்களுக்கு பாவிக்கப்பட்டு வருகின்றது.

இப்போது தடுப்பூசி போடாதவர்கள் அதிகளவில் இறப்பினை சந்திக்கின்றார்கள். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்தத் தடுப்பூசியைப் போடுவதன் மூலம் உயிரிழப்புகளில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

இனி வைத்தியசாலைக்கு வருவோர் தடுப்பூசி ஏற்றப்பட்டதற்கான அட்டையினை கொண்டு வருதல் மிக அவசியமாகும்.

ஆகவே பொதுமக்கள் தற்போதுள்ள நிலைமையை அனுசரித்து செயற்படுவதன் தொற்றிலிருந்து தப்பிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version