ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்பெற்று வரும் ஒலிம்பி போட்டித்தொடரில் நடைபெற்ற குதிரையேற்றப் போட்டியில் இலங்கைசார்பாக பங்கேற்ற மடில்டாகார்ல்சனின் குதிரை பாயமறுத்ததால் தோல்வியுற்று வெளியேறினார்.
இலங்கையில் பிறந்து சுவீடன்நாட்டு பெற்றொர்களால் வளர்க்கப்பட்ட கார்ல்சன் ஜேர்மனியில் வசித்து வருகிறார்.
இவர் ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறும் குதிரையேற்றத்தில் இலங்கைசார்பாக பங்கேற்றார். 75 குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில் 13வது வீரராக மடில்டாகார்ல்சன் தனது குதிரையுடன் களமிறங்கினார்.
கார்ல்சனின் உத்தரவிற்கமைய ஏழு தடை தாண்டல்களில் பாய்ந்த குதிரை, 8வது தடை தாண்டலின் பாய மறுத்தது. இதனால் கார்ல்சன் தோல்வியைத் தழுவி களத்தில் இருந்து வெளியேறினார்.
இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் அரங்கில் இலங்கையின் இறுதிவாய்ப்பும் இல்லாமல்போனது.