நாடாளுமன்ற பெண்உறுப்பினர் வாய்மொழிமூலம் பாலியல்ரீதியாக இழிவுபடுத்த பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் நீதிஅமைச்சரும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தலாதஅது கோரளவிற்கே இவ்வாறுஅநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தபட்டுள்ளது.
ஐக்கிய மக்கள்சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினிகவிரட்ன இது குறித்து குற்றம் சுமத்தியுள்ளார்.
எரிசக்திஅமைச்சர் உதயகம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின்போது, ஆளும்கட்சியின் சிலஉறுப்பினர்கள் தலதா அதுகோரளவை பாலியல்ரீதியில் இழிவுபடுத்தினர்கள்/
மக்களின் பிரச்சினைகக்காக குரல் கொடுக்கும்போது பெண்களது தனிபட்ட விடயங்களை சுட்டிகாட்டி பாலியல்ரீதியாக இழிவுபடுத்துவது ஏற்புடையதல்ல.
நாடாளுமன்றில் மொத்தம் 12உறுப்பினாகள் இருக்கின்றனர். இவ்வாறான பாலியல் துன்புறுத்தல், இழிவு படுத்தல்கள் ஆகியவை கண்டிக்கப்பட வேண்டும் என்றார்.