நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களும் பயன்பெற கூடியவகையில் விரைவில் கல்விக்கான தேசியவானொலி அலைவரிசை ஒன்று அரம்பிக்கப்படவுள்ளது.
கொரோனாதொற்று நிலைமையை கருத்தில் கொண்டு மாணவர்களின் கல்வியில்கவனம் செலுத்த இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப் படவுள்ளது.
கல்விஅமைச்சரும் வெகுசனஊடக அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதுதொடர்பாக அமைச்சரவை தீர்மானம் வருமாறு:
ஆரம்பநிலை, இரண்டாம்நிலை, உயர்கல்வி மற்றும் மூன்றாம் நிலை கல்விக்கான தேசியவானொலி அலைவரிசை ஒன்றை ஆரம்பித்தல் கொவிட் – 19 தொற்று நிலைமையில் ஏற்பட்ட சமூகஇடைவெளி காரணமாக கல்வியில் தோன்றியுள்ள ஏற்றத் தாழ்வுகளுக்கு தீர்வுகாணும் வகையில் நாடளாவியரீதியில் வீச்சுக்கொண்ட வானொலி கல்வி அலை வரிசையை ஆரம்பிப்பதற்கு கல்விஅமைச்சும் வெகுசன ஊடகஅமைச்சும் இணைந்து திட்டமிட்டுள்ளது.
அதற்குதேவையான உட்கட்டமைப்பு வசதிகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒருகுறிப்பிட்ட காலம்எடுப்பதால், கல்வி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட வானொலி அலைவரிசையை துரிதமாக ஆரம்பிப்பதற்கு இயலுமானவரை தற்போது இலங்கைஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அலை வரிசைகளில் நாடளாவிய ரீதியான வீச்சு கொண்ட அலைவரிசையை கல்விநிகழ்ச்சி திட்டங்களை ஒலிபரப்புக்கு பயன்படுத்த கல்விஅமைச்சரும் வெகுசனஊடக அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவைஅங்கீகாரம் வழங்கியுள்ளது.