தமிழர் இல்லாத பகுதியில் உள்ள இந்துகோயிலை அகற்றுமாறு பிக்கு தலைமையில் போராட்டம்!

குளியாபிட்டி, போஹிங்கமுவ பகுதியில் உள்ள இந்து கோயிலை அகற்றுமாறு பெளத்த பிக்கு தலைமையில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மக்களது எதிர்ப்புகளை தவிர்ப்பதற்காக கோவிலின் முன் புத்தர்சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அக்கோவில் அகற்றப்பட வேண்டுமெனவும் பௌத்த பிக்கு கூறினார்.

குறித்த கோயிலின் அர்ச்சகரால் 15 வயது சிறுமி ஒருவர் கோயிலுக்குள் வைத்து துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை அடுத்து, அக் கோயிலை அகற்ற வேண்டுமென பௌத்த பிக்கு தெரிவித்தார்.

அத்தோடு தமிழர்கள் இல்லாத இடத்தில் அமைந்துள்ள இந்த கோயிலை உடனடியாக அகற்ற வேண்டுமெனவும் பிக்கு தலைமையிலான குழுவினரால் வலியுறுத்தப்பட்டது.

தனது மகளின் காதல் உறவை முறிப்பதற்காக தாயாரால் அக்கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்ட 15வயது சிறுமி, கோயிலுக்குள் வைத்து அர்ச்சகரால் இரு நாட்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அர்ச்சகர் தலைமறைவாகி உள்ளார்.

ஹெட்டிபொல வீதியில் கோயில் அமைக்கப்பட்டபோது எழுந்த சர்ச்சையை அடுத்து, இப்போதுள்ள இடத்தில் கோயிக் அமைத்ததாகவும், கோவிலின் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு பலகடிதங்களை அனுப்பியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்கரர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version