ஆசிரியர்களது சம்பளத்தை உயர்த்த தற்போது அரசிடம் பணமில்லை!

ஆசிரியர்களது சம்பளங்களை உயர்த்த திரைசேரியில் தற்போது பணமில்லைஎன அமைச்சர் காமினிலொகுகே தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாட்டை களைந்து சம்பளத்தை உயர்த்த போதியளவு பொருளாதார இயலுமை நாட்டில்கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை கூட்ட முடிவின்பின் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களது சம்பள முரண்பாடு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் எமது பிரச்சினை இல்லை எனவும் அது கடந்த அரசின் பிரச்சினை ஆகும்.

தற்போது திரைசேரியில் பணம் இல்லாததால், வரவு செலவுதிட்ட சமர்ப்பிப்பின் போது இது தொடர்பில் கவனம் செலுத்த முடியும். எனினும் இப்போதைக்கு முடியாது.

ஆசிரியர்கள் அதிபர்களது கோரிக்கையை நிறை வேற்ற 56 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது. அதனை இப்போதைக்கு வழங்க முடியாது.

முழுஉலகிலும் கோவிட் காரணமாக பொருளாதார பிரசனை உருவாகியுள்ளது. ஆசிரியர்கள் ஓராண்டுகாலம் வீட்டில் இருந்தார்கள் நாம்அவர்களது சம்பளங்களை குறைக்கவில்லை.

பொருளாதார நிலைமை மாற்றம் அடைந்தால் சம்பள முரண்பாடுகளை களைவது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என்றார்.

Exit mobile version