தினமும் கொவிட்தடுப்பூசி ஏற்றலில் இலங்கை உலகளவில் முதலிடத்தில் வகிப்பதாக ourworldindata.org எனும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
100பேரில் எத்தனைபேருக்கு தடுப்பூசி ஏற்றபட்டது என்பது தொடர்பான புள்ளி விபரதகவல்களின் அடிப்படையில் இந்தவிடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் 100 பேருக்கு 15 மாத்திரை தடுப்பூசிகள் ஏற்றப்பட்டதாகவும் இது இஸ்ரேலை விட அதிகஎண்ணிக்கை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் 100 இலட்சத்திற்கும் அதிகமானதடுப்பூசிகள் முதல் மாத்திரையாக இலங்கையில் வழங்கப்பட்டது.
இலங்கையில் 30 வயதிற்கும் அதிகமான 88வீத மக்களுக்கு குறைந்த பட்சம் ஒரு மாத்திரை தடுப்பூசியேனும் ஏற்றப்பட்டு உள்ளதாக குறித்த இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.
30 வயதிற்கு மேற்பட்ட சனத்தொகையில் 20 வீதமானோருக்கு 2ம் மாத்திரையும் வழங்கப்பட்டுள்ளது.
உலகமொத்த சனத் தொகையில் 28.5 வீதமானவர்களுக்கு முதல்மாத்திரை வழங்கப்பட்டு ள்ளதாகவும் 14.7 வீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.