கேரளாவில் கடந்த 2016ம் ஆண்டில் ஆலய பிரார்த்தனைக்காக வந்த 15வயது சிறுமியை வலுகட்டாயபடுத்தி தனியாக அழைத்து சென்ற பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்திருந்தார். இதனால் அந்த சிறுமி கர்ப்பிணியானார்.
இந்நிலையில் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்ததகவல், அக்கம் பக்கத்திற்கு தெரியவரவே, மெல்ல மெல்ல இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
இதன் பின்னர் போலீசார் பாதிரியார் ராபினை(வயது 40) கைது செய்தனர்.
நீதிமன்றில் பாதிரியாரை போலீசார் முற்படுத்திய போது, பாலியல் பலாத்காரம் வழக்கில் 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது சிறையில் இருக்கும் குறித்த பாதிரியாரை, திருமணம் செய்வதற்கு அவரால் பாதிக்கப்பட்ட பெண் விருப்பம் தெரிவித்து நீதிமன்றத்தினை நாடியுள்ளார்.
இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் பாதிரியார் ராபின், சிறுமியின் சம்மதத்துடனேயே தான் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், அவரையே திருமணம் செய்ய விரும்புவதாகவும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமெனவும் மேல் முறையீடு செய்திருந்தார்.
அதை ஏற்கமறுத்த நீதிமன்று மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது 20 வயதானது. இதனை அடுத்து அவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்தமனுவில், சிறையில் உள்ள பாதிரியார் ராபினை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். நானும் எனதுகுழந்தையும் அவருடன் சேர்ந்துவாழ விரும்புவதால் பாதிரியார் ராபினுக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தமனு மீதான விசாரணை நாளை நடைபெறஉள்ளது.
பேயினை ஓட்டுவதாக மாமியையும், மருமகளையும் பலாத்காரம் செய்த பூசாரி!