லண்டனில் நடைபெறவுள்ள சுற்றுசூழல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரித்தானியாவிற்கு பயணம் செய்யவுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியா பயணத்தை முடித்து கொண்டு ஐ.நா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு செல்லவதற்கும் தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இரசாயன உர பயன்பாட்டுக்கு தடை விதித்து, சேதன பசளை பாவனையை ஊக்குவித்து வந்தமைக்கு, பாராட்டு தெரிவித்ததுடன், லண்டன் மாநாட்டில் கலந்து உரை நிகழ்த்துமாறும் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த அழைப்பை ஏற்க மறுத்த ஜனாதிபதி பின்னர் அந்த அழைப்பினை ஏற்பதற்கு தீர்மானம் எடுத்ததாக கூறப்படுகிறது.
லண்டன் மாநாட்டின் பின்னர் நேரடியாக அமெரிக்கா நோக்கி பயணமாவதற்கு ஜனாதிபதி தீர்மானம் எடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.