பேயினை ஓட்டுவதாக தெரிவித்து மாமியையும், மருமகளையும் பாலியல் பாலத்காரம் செய்த பூசாரி ஒருவரை பொலிஸார் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் பதுளை ஹாலிஎல போகொட பகுதியில் உள்ள வீட்டில் நேற்று முந்தினம் (31) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
தனது மனைவியையும், மருமகளையும் பூசாரி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கணவன் அளித்த முறைப்பாட்டை அடுத்து, பொலன்னறுவை, மெதிரிகிரிய பகுதியை சேர்ந்த 40 வயதுடைய பூசாரி கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
கண்ணுக்குத் தெரியாத கொடூர சக்திகள் வீட்டில் இருப்பதாக பூசாரி கூறியுள்ளார். இதனால் வீட்டுக்காரர்கள் பெரும் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் இதனை அகற்ற சடங்கு ஒன்றினை அவசியம் நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி, அன்று இரவே பூஜைகள் தொடங்கப்பட்டது. பூஜை இடம்பெறுவதால் ஆண்கள் வீட்டுக்குள் நுழைய வேண்டாம் என பூசாரி சொல்லியுள்ளார்
அத்தோடு பெண்கள் மாத்திரமே வீட்டில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. வீட்டு பெண்களிற்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பூசாரியுடன் வந்த சீடர் யாகம் நடத்துவதற்கு உதவி புரிந்துள்ளார். அதிகாலையில், வீட்டிலுள்ள ஆண்களை அருகே உள்ள முச்சந்திகளில் நிற்கும்படி சொல்லி பூசாரியினால் அனுப்ப பட்டனர். இதற்கான பரிகார பொருட்களுடன் முச்சந்திக்கு பூசாரியின் உதவியாளர் அனுப்பப்பட்டார்.
இதன் பின் வீட்டில் 45வயது பெண்ணும் 19வயது மருமகள் மற்றும் பூசாரி ஆகியோர் மாத்திரமே வீட்டில் இருந்தனர்.
இதன்போது 45 வயது பெண்ணிற்கும், 19 வயதான மருமகளிற்கும் கறுப்பு இளவரசனது பார்வை இருப்பதாகவும் இதனை அகற்ற மற்றுமொரு பரிகாரம் செய்ய வேண்டுமெனவும் பூசாரி தெரிவித்துள்ளார்.
பரிகாரத்தை செய்வதற்கான பிரசாத பொருட்களை தயாரித்து, அறைக்குள் கொண்டு சென்ற பூசாரி, 45 வயதான பெண்ணை உள்ளே அழைத்தார். இதன்பின் அறை பூட்டபட்டது, மின்விளக்குகளும் அணைக்கப்பட்டது. பின்னர் 45வயது பெண்ணை பலவந்தமாக உடலுறவு கொண்டார்.
பின்னர, தான்னால் தயார் செய்யப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்டு, மூன்று முறை உடலுறவு கொள்வதன் மூலம் கெட்ட சக்தியான கறுப்பு இளவரசனை விரட்டலாம், அதை செய்யாவிட்டால் கடுமையான ஆபத்தை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
இதனால் மிரண்டு போன 45வயது பெண், பேயினை ஓட்டுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஒருமுறை மாத்திரமே பூசாரியை உடலுறவிற்கு மாமியார் அனுமதித்துள்ளார்.
பின்னர், 19 வயதான மருமகளுக்கு பேயினை ஓட்டியுள்ளார்.
நடத்த விடயத்தை 45 வயது பெண் தனது கணவரிடம் தெரிவித்ததை அடுத்து, பொலிஸில் கணவர் முறையிட்டார். அதன்பின் பொலிசார் பேயினை ஓட்டிய பூசாரியை கைது செய்தனர்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பூசாரியிடம் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.