பயாகல – கொரகதெனிய பகுதியில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து சிறப்பித்த சுமார் 85 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கே தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஜீலை 24ம் திகதி பூப்புனித நீராட்டு விழாவினை வீட்டில் நடாத்துவதற்கு திட்டம் இடப்பட்ட நிலையில், பேருவளை பொது சுகாதார பரிசோதகர்களால் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொள்ள 35 பேர் அந்த வீட்டுக்குச் சென்றமை தெரிய வந்தது. இதை அடுத்து பூப்புனித நீராட்டு விழா நிறுத்தபட்டமையால், குறித்த விழாவிற்கு கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட அனைவரது வீட்டிற்கும் சமைத்த உணவு பொதி வழங்கபட்டது.
ஜூலை 26ம் திகதி அன்று உணவு பொதிகளை வழங்க சென்ற ஒருவருக்கு நடாத்தப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனையில் தொற்று இருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
பின்னர் 212 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 62 பேர் தொற்றாளகளாக இனம் காணப்பட்டனர்.
இதனை அடுத்து அப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தபட்டுள்ளது.