அமெரிக்க ராணுவத்திற்கு சமனாக சீன ராணுவம் வளர வேண்டும்! ஷி ஹிங்பிங் வலியுறுத்து!

எதிர்வரும் 6 ஆண்டுகளிற்குள் அதாவது 2027ம் ஆண்டுக்குள் சீன இராணுவம் அமெரிக்க இராணுவத்திற்கு சமனான உலகத்தின் தலைசிறந்த இராணுவமாக வரவேண்டுமென சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங் வலியுறுத்தியுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை சீன ராணுவ தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இது குறித்து சீன ஜனாதிபதி பேசியதாவது.

சீனப் படைகள் மீதான அனைத்து அதிகாரமும் கம்யூனிஸ்ட் கட்சியிடம் தான் உள்ளது. சீன ராணுவம் உருவாக்கப்பட்டு என்று 94 ஆவது ஆண்டுவிழாவை காணும் நிலையில் இராணுவ அதிகாரிகள், வீரர்கள், துணை இராணுவப் படையினர், போலீசார், ஆயுதக் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

முன்னரே முடிவு செய்தபடி எதிர்வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்க ராணுவத்திற்கு சமனாக சீன ராணுவத்தையும் உலகின் தலைசிறந்த ராணுவம் ஆக்குவதற்கான முயற்சிகளை ராணுவ அதிகாரிகள் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.

புதிய சோசலிச சமூகத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் தேசப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு படைகளின் வளர்ச்சி முக்கிய அங்கமாகும்.

காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றங்களை செய்தல் சீனப் படைகள் முன்னேற்றத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

சீன ராணுவம் உருவாக்கப்பட்டு எதிர்வரும் 2022ஆம் ஆண்டு நூற்றாண்டு விழா காண இருக்கின்ற நிலையில் அதற்குள் அமெரிக்க இராணுவத்திற்கு சமனான ராணுவமாக மேம்படுத்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version