பிரித்தானியா உட்பட நான்கு நாடுகளுக்கு பயணத்தடை!

பிரித்தானியா உட்பட மேலும் 3 நாடுகளுக்கு இஸ்ரேல் பயணத்தடையினை விதித்துள்ளது.

பிரித்தானியா, ஜார்ஜியா, சைப்ரஸ் மற்றும் துருக்கி ஆகிய நான்கு நாடுகளிலும் கொரோனா பரவல் வேகமாக பரவ தொடங்கியுள்ளமையினாலேயே குறித்த பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இஸ்ரேலின்நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் இந்தியா, அர்ஜென்டினா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா, மெக்சிகோ, ரஷ்யா, பெலாரஸ், உஸ்பெகிஸ்தான், ஸ்பெயின் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கும் இஸ்ரேல் தடை விதித்துள்ளது.

எனினும் விதிவிலக்கு குழுவினது அனுமதியினை பெற்றபின் பயணத்தினை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 26ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 71 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version