கனடாவில் படிக்க செல்வோருக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்!

தற்போது காணப்படும் கொரோனா கட்டுப்பாடுகளால் கனடாவில் படிப்பதற்கென செல்லும் இந்திய மாணவர்கள், பெரும் அசெளகரியங்களை சந்திப்பதாக தெரிய வருகிறது.

கனடாவிற்கு பயணிக்கும் இந்திய மாணவர்கள் வழமையாக செலவு செய்யும் தொகையைவிட 8மடங்கு அதிகமாக செலவு செய்ய வேண்டியுள்ளது.

அத்தோடு மூன்றாவது நாடு ஒன்றின் வழியாகவே கனடா செல்ல வேண்டியுள்ளது.

இந்திய மாணவர்கள் கனடாவிற்கு செல்வதற்கு, மாலைதீவின் தலைநகரான மாலேவுக்கு சென்று அங்கே 14 நாட்கள் தனிமைபடுத்தபட்ட பின்னர் ஐக்கிய அரபு அமீரகம் சென்று அங்கிருந்தே கனடாவிற்கு செல்கிறார்கள்.

இதனை பயன்படுத்தி மாலே செல்லும் விமானநிறுவனங்கள் இலாபம் சம்பாதிக்க முயல்வதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

அதுவும் அந்த மூன்றாவது நாட்டில் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்தி கொள்ளவும் வேண்டும். ஆக, இந்தியாவிலிருந்து கனடா செல்லும் ஒரு மாணவருக்கான செலவு இந்திய ரூபாயில் சுமார் 3.5 இலட்சம் என கூறப்படுகிறது.

இதில் மாலேயில் தனிமைப்படுத்துதலுக்கான செலவு 1.25 இலட்ச ரூபாய் எனவும், விமான பயணத்துக்கு 2 இலட்ச ரூபாய் ஆக மொத்தம் இந்தியாவிலில் இருந்து கனடாவிற்கு செல்லும் ஒரு மாணவருக்கான செலவு 3.5 இலட்சம் முடிவதாக கூறப்படுகிறது.

Exit mobile version