யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்த தர்சிகா ரீச்சரால் பாதிக்கப்பட்டதாக கூறி, சுவிற்சர்லாந்து வாசியொருவர் சமூக ஊடகங்களில் நீதி கோரியுள்ளார்.
சுவிற்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவரை பதிவு திருமணம் செய்துவிட்டு, அதனை மறைத்து யாழ்ப்பாணத்தில் இன்னொருவரை திருமணம் செய்து இரண்டு மாப்பிள்ளைகளிற்கும் கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டியுள்ளார் குறித்த ஆசிரியை.
இதனை அறிந்த புது மாப்பிள்ளை தர்சிகாவை பெற்றோரிடம் ஒப்படைத்து குட்பாய் சொல்லி போய்விட்டார்.
தர்சிகா ரீச்சரின் ஒன்று விட்ட சகோதரி சுவிற்சர்லாந்தில் திருமணம் முடித்திருந்தார்.
அப்போது பல்கலை கழக மாணவியாக இருந்த தர்சிகா, அக்காவின் கணவருடன் காதல் உறவை ஏற்படுத்தி உள்ளார். இதனை அறிந்த தர்சிகாவின் ஒன்றுவிட்ட அக்கா, கணவரை விவாகரத்து செய்துவிட்டார்.
இதன்பின், இலங்கை வந்த அத்தான், மனைவியின் தங்கையை ஆறு வருடங்களுக்கு முன்னர் யாழ் நகரிலுள்ள விடுதியொன்றில் பதிவு திருமணம் செய்தனர்.
இந்த திருமணஉறவு நீடித்து கொண்டிருந்த போதே, வேறு ஒருவருடன் திருமணம் செய்ய முற்பட்ட போது, நிச்சயிக்கப்பட்ட மணமகனுடன் பேசி, அந்தபெண் தனது மனைவியென்பதற்கான ஆதாரங்களை காண்பித்து திருமணத்தை நிறுத்தி உள்ளார்.
இந்நிலையில், சில வாரங்களிற்கு முன்னர் ஒருவரை திருமணம் முடித்துள்ளார்.
இந்த திருமணத்திற்காக சேலை வாங்கும் போது, சுவிஸ் கணவனுடன் தொலைபேசியில் காட்டியே சேலையை வேண்டி இருந்தா. தனது சகோதரியின் பட்டமளிப்பிற்கு என கூறியே சேலையினை வேண்டி இன்னொருவரை திருமணம் செய்திருந்தார்.
இந்த திருமணம் குறித்து சுவிஸ் கணவருக்கு ஆசிரியையிடம் பயிலும் மாணவன் ஒருவர் முகநூல் ஊடாக தெரியப்படுத்தியுள்ளார்.
இதனை அடுத்து, மனைவியின் புதிய கணவரது தொடர்பை, சுவிஸிலிருந்த கணவன் பெற்றுள்ளார்.
புதிய கணவரை தொடர்பு கொண்டு சுவிஸ் கணவர் தொலைபேசியில் கதைத்ததை அடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை புதிய கணவர் அறிந்துள்ளார்.
அவர் மனைவியை தாக்கி, வாகனத்தில் ஏற்றி சென்று மனைவியின் பெற்றோரிடமே ஒப்படைத்து விட்டு சென்று விட்டார். அத்துடன் விவாகரத்து வழக்கும் தொடர்ந்துள்ளார்.
சுவிஸிலிள்ள கணவன் பெண்ணுடன் திருமண விவகாரத்தில் தொடர்புபட்ட ஏனைய இருவரும் நண்பர்களாகி விட்டனராம்.
தனது மனைவியின் வீட்டின் பழைய புகைப்படத்தையும், தன்னை திருமணம் செய்த பின்னர் வீட்டின் புகைப்படத்தையும் பதிவிட்டு, மனைவிக்காக 40 இலட்சத்திற்கும் அதிக பணத்தை செலவிட்டதாகவும், தன்னை ஏமாற்றிய மனைவி அவற்றை மீள தனக்கு தர வேண்டுமென்றும் பதிவிட்டுள்ளார்.
வாழ்க்கையில் கண்ணாம்பூச்சி ஆட முற்பட்டவர், இப்போது கண்ணீருடன் வீட்டிலிருக்கிறார்.