போதையில் இளைஞனை கடத்தி சித்திரவதை செய்த பொலிஸார்!
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸார் மதுபோதையில் இருந்தபோது இளைஞர் ஒருவரை கடத்தி சித்திரவதை செய்ததாக மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸாரினால் பாதிக்கப்பட்ட இளைஞன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட பிராந்திய அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், மதுபோதையில் ஹயஸ் ரக வாகனத்தில் வந்து தன்னை கடத்திசென்றதாகவும், வாகனத்தினுள் வைத்து கைத்துப்பாக்கியினால் தாக்கியதாகவும், சில கிலோ மீற்றர் தூரத்தில் தன்னை வீதியில் வீசியதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒருவார காலத்தினுள் மட்டும் கோப்பாய் பொலிஸாரினால் மனித உரிமைகள் மீறப்பட்டமை குறித்து மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் நான்கு முறைப்பாடுகள் முறையிடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் விளக்கங்கள் கோரி கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலயில் கோப்பாய் பொலிசாரினால் தொடர் மனிதவுரிமை மீறல்கள் நடைபெறுவதாக்க சுட்டி காட்டப்பட்டுள்ளது.