சில வாரங்களுக்கு முன்னர் 15 வயது சிறுமியை இணையத்தளத்தின் ஊடாக விற்பனை செய்து துஷ்பிரயோகம் செய்த விடையத்தில் முக்கிய பல பெரும் புள்ளிகள் சிக்கியிருந்தனர். இதில் 40இற்கும் அதிகளவானோர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், இந்த வலையமைப்பை நடத்தி வந்த ஒருவர், சில நாட்களுக்கு முன்னர் “மவுண்ட் லவனியா” பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இவ்விடையத்தின் பிரதான சந்தேகநபரது வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இதன்போது, சிறுமியை நிர்வாணமாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து, இணையத்தளத்தின் மூலம் பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக புலனாய்வாளர்கள் நீதிமன்றுக்கு வெளிப்படுத்தினர்.
சிறுமியின் உடலுறவு காட்சிகளை பார்ப்பதற்கு நேரத்தினை பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கபட்டதாகவும், 5-10 நிமிடங்கள் பார்ப்பதற்கு ரூ. 5,000 தொடக்கம் 8,000 வரையில் பணம் வசூலிக்கப்பட்டதாகவும் புலனாய்வாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய எவராவது கைது செய்யப்படாமல் இருக்கின்றார்களா என நீதிமன்று புலனாய்வாளர்களிடம் வினவியது.
தற்போது தொலைப்பேசி பகுப்பாய்வு நடைபெற்று வருவதாகவும், மேலும் சிலர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட வேண்டுமென புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
சிறுமியின் பாலியல் விளம்பரங்களை வெளியிட்ட லங்கா அட் உள்ளிட்ட சில இணையதளங்ளை தடைசெய்யுமாறு நீதிமன்று உத்தரவிட்டது.