இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான யோசனைக்கு பிரிட்டன், ஜேர்மன் மற்றும் பல முக்கிய நாடுகள் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் செப்டம்பரில் ஜெனீவாவில் 48வது ஐ.நா மனித உரிமை பேரவை அமர்வு நடைபெறவுள்ளது.
இந்த அமர்வில் இலங்கைக்கு கெதிரான பொருளாதாரத்தடையை அமுல்செய்யும் யோசனை பிரித்தானியா உள்ளிட்ட முக்கிய நாடுகளால் கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையினை விதிக்கும் யோசனைக்கு மெஸிடோனியா, கனடா, ஜேர்மன், மொட்றிகோ ஆகிய நாடுகளும் ஆதரவளிப்பதற்கு விருப்பம் வெளியிட்டிருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.