முல்லைத்தீவில் 49ஏக்கரை உரிமை கேரி வந்த சீனர்!

முல்லைத்தீவு மாவட்டத்தின், வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் 49ஏக்கர் தனக்கு சொந்தமான நிலமென உரிமை கேரி சீன வம்சாவளியை சேர்ந்த ஒருவர் நேற்று வந்திருந்தார்.

கோட்டாபய கடற்படை முகாமிற்கான காணி அளவீட்டு முயற்சி நேற்றைய தினம் முன்னெடுக்க முயற்சித்த போது மக்களின் பெரும் ஆர்ப்பாட்டத்தினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அளவீட்டு பணிக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, அங்கு சீன வம்சாவளி சேர்ந்த பிரஜையின் குடும்பமும் வந்திருந்தது.

நீர்கொழும்பில் வசித்து வருகின்ற அவருக்கு கோட்டாப கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர் காணியிருப்பதாக தெரிவித்திருந்தார்.
சீன தந்தை ஒருவருக்கும் சிங்கள தாய்க்கும் பிறந்ததான், தற்போது சிங்கள பெண்ணை திருமணம் முடித்திருப்பதாக கூறினார்.

அந்த சீனநாட்டை சேர்ந்தவர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வந்து இதுவரைகாலமும் தனது காணியினை கடற்படை பயன்படுத்திவருவதற்கு நட்ட ஈட்டை பெறுவதற்கு கட்டாயம் அங்கு நில அளவீடு இடம்பெற வேண்டுமென கூறினார்.

இதனை அடுத்து குறித்த நபரது கருத்திற்கு அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கடும் கண்டனங்களை வெளியிட்டதோடு, சீனச்சிங்களவரே வெளியேறு என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பியதை அடுத்து ஆர்ப்பாட்ட இடத்திலிருந்து அந்நபர் வெளியேறியிருந்தார்.

Exit mobile version