தினமும் பதிவாகும் தொற்றாளர்களது எண்ணிக்கை மீளவும் அதிகரித்து வருகிறது. எனவே விதிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை மக்கள் பின்பற்றாவிட்டால் கடுமையான கட்டுபாடுகளை விதிக்க நேரிடும் என இராணுவளபதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது:-
“இலங்கையில் தினமும் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை ஒரு மாதத்தின் பின் நேற்று முன்தினம் 1,900 ஐத் தாண்டியுள்ளது.
அத்தோடு, நேற்று 2,300 இற்கும் அதிகமான கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இவர்கள் அனைவருமே புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புபட்டவர்கள்.
சில கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வந்தமையினால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.
ஆகவே, மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லையேல் மீளவும் இறுக்கமான கட்டுப்பாடுகளை நாம் விதிக்க வேண்டிவரும் என்றார்.