ரிஷாத் பதியூதியின் வீட்டில் வேலை செய்த போது, கழிப்பறையினை சரியாக கழுவாமைக்கு கொமட்டிற்குள் அமுக்கி அழுக்கு நீரினால் குளிப்பாட்டி ரிஷாத்தின் மனைவி சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நடாத்தப்படும், பொலிஸ் விசாரணையின் போதே கண்ணீர் மல்க குறித்த சிறுமி வாக்கு மூலத்தினை வழங்கியதாக சிங்கள ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் 11 பெண்களில் ஒரு சிறுமி மாத்திரமே இவ்வாறு வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளார்.
ரிசாத்தின் வீட்டின் கழிப்பறையை சரியான முறையில் கழுவவில்லை என்றால் அவரது மனைவி எங்கள் முகத்தை கழிப்பறை கொமட்டிற்குள் அமுக்கி அழுக்கு நீரில் குளிப்பாட்டிவிடுவார்.
சாப்பிட்டு முடித்த பின்னர் தட்டுகளை சரியாக கழுவவில்லை என்றால் அதில் இருக்கும் அழுக்கு நீரை முகத்தில் வீசுவார் என பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார்.
ரிஷாத்தின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பணிபெண்கள் அனைவரையும் சித்திரவதைக்கு உட்படுத்தி மோசமான முறையில் தாக்கியமை விசாரணைகளில் வெளிவந்துள்ளது.
சில சந்தர்ப்பங்களில் துடைப்பக் கட்டை உடையும் வரை தாக்குதல் நடாத்தியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.