பிரபல நாட்டை நோக்கி ஐ.எஸ் போராளிகள் படையெடுப்பு! ரஷ்யா வெளியிட்ட தகவல்!
உலகினை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் தொடர்பில் ரஷ்ய பரபரப்பான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த மே மாத ஆரம்பத்தில் இருந்து சர்வதேச படைகள் விலக தொடங்கியதை அடுத்து, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தனது தாக்குதலை முடுக்கிவிட்டது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு 2020இன் பிப்ரவரி மாந்த்தில் தோஹாவில் தலிபானும் அமெரிக்காவும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் ஒரு அம்சமாக ஆப்கானிஸ்தானின் அமைதிக்காக இறக்கப்பட்ட அமெரிக்க படைகளை, அமெரிக்க அரசு திரும்ப அழைத்துவிட்டது.
இந்நிலையில், சிரியா, லிபியா மற்றும் பல நாடுகளில் இருந்து ஐ.எஸ் போராளிகள் ஆப்கானிஸ்தானுக்கு நகர்வதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் Sergei Shoigu தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஆப்கானிஸ்தானிற்கு ஏதேனும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படுமானால், தஜிகிஸ்தானில் இருந்து ரஷ்யா இராணுவ உதவியை வழங்கும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.