இலங்கை

பல கோடி பெறுமதியான உலகின் மிகபெரிய மாணிக்ககல் இலங்கையில் கண்டுபிடிப்பு!

உலகத்தின் மிகப்பெரிய “star sapphire cluster” என கூறப்படும் மாணிக்க கல் பாறை ஒன்று இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்திலே குறித்த மாணிக்கக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் வீடொன்றிற்கு கிணறு  தோன்றும் போது குறித்த மாணிக்ககல் பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இளம் நீல நிறமான குறித்த பாறை படிகம் மற்றும் குருந்தம் இணைந்து உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

510 கிலோ எடையுடைய குறித்த கல் சர்வதேச சந்தையில் 100 மில்லியன் டொலர் பெறுமதியுடையது என தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button