இலங்கை

விசேட கழிப்பறை கோருகிறார் ரஞ்சன் ராமநாயக்க!

சிறைத்தண்டனை அனு பவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறை யில் உள்ள சாதாரண கழிப் பறைகளை தன்னால் பயன் படுத்த முடியாது என்று கூறி யுள்ளார் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிறப்பு வகை கழிப்பறை வசதி வழங்குமாறு பல சந்தர்ப்பங்களில் ரஞ்சன் ராமநாயக் கவால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் திலீப் வெதராச்சி தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும் இந்த வசதி வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ரஞ்சன் ராமநாயக்க முழங் கால் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார் என வும், இதனால் சாதாரண கழிப்பறையைப் பயன் படுத்த முடியவில்லை எனவும் திலீப் வெதராச்சி கூறி யுள்ளார்.

இதேவேளை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button