53 அரசியல் கைதிகள் படுகொலை!

1983ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடம்பெற்ற தமிழின அழிப்பை தொடர்ந்து – ஜூலை 25, 27ம் திகதிகளில் வெலிக்கடை சிறச்சாலைக்குள் வைத்து 53 அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

இதில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளகளான தங்கதுரை, குட்டிமணி ஆகியோர் உள்ளடங்களாக 53 அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.

குறித்த படுகொலையின் 38வது நினைவு தினம் இன்றாகும்.

வெலிக்கடை படுகொலையின் 38வது நினைவு தினமானது திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் நினைவரங்கில் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் (ஜனா) தலைமையில் சுடரேற்றி அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.

அத்தோடு தமிழீழ விடுதலை இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற ஶ்ரீகாந்தா தலைமையிலான அணியினரினாலும் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கனகேந்திராசா ஆகியோர் கலந்து அஞ்சலி செலுத்தினர்.

Exit mobile version