உலகம்

32வயது கூடியவரை திருமணம் செய்த டயானாவின் மருமகள்!

பிரித்தானியா இளவரசியாக இருந்த டயானாவின் மருமகள் 62 வயதுடைய ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

இளவரசி டயானாவின் மருமகளான லேடி கிட்டி ஸ்பென்சர் என்பவரே மைக்கேல் லூயிஸ் எனும் கோடீஸ்வரரை இத்தாலியில் வைத்து திருமணம் செய்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு இத்தாலியின் ரோம் நகரில் வைத்து நடிபெற்ற திருமணத்தில் முக்கிய விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் விருந்து ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில், பிரித்தானிய நடிகர் இட்ரிஸ் எல்பாவின் மனைவி சப்ரினா உட்பட முக்கியமான பலர் திருமணத்திலும் விருந்திலும் கலந்து கொண்டுள்ளனர்.

இளவரசி டயானாவின் இளைய சகோதரர் சார்லஸ் ஸ்பென்சர் மற்றும் முன்னாள் பிரித்தானிய மொடலான விக்டோரியா ஐட்கன் ஆகியோரின் மகள் தான் கிட்டி ஸ்பென்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button