சிறுவர்களுக்கு அமெரிக்க தடுப்பூசியை ஏற்ற அனுமதி!

கொரோனா தொற்றுக்கு அமெரிக்க தயாரிப்பான மொடர்னா தடுப்பூசியை 12 – 17 வயதுக்கு இடையிலான சிறுவர்களுக்கு செலுத்த ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

தற்போது வரை கொரோனா தடுப்பூசிகளானது 18 வயதிற்கும் அதிகமானவர்களுக்கே போடப்பட்டு வருகிறது.

ஆனால் பைசர் தடுப்பூசி மாத்திரம் 12 வயதுக்கு அதிகமான சிறுவர்களுக்கு செலுத்தபடுகிறது.

எனினும் பல தடுப்பூசிகள் 18 வயதிற்கும் குறைவானவர்களிடம் பரிசோதனையில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் மொடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிகளானது 12 – 17 வயதிற்கு இடைப்பட்ட 3,700இற்கும் அதிகமான சிறுவர்களுக்கு செலுத்தி பரிசோதனை நடாத்தப்பட்டது.

குறித்த பரிசோதனைகள் வெற்றியளித்தது.

இதனை அடுத்து மொடர்னா தடுப்பூசியை 12 தொடக்கம் 17வயது வரையிலானவர்களுக்கு ஏற்றலாம் என அமெரிக்க மருந்துகள் நிறுவனம் பரிந்துரை வழங்கி இருந்தது.

இதனை அடுத்தே, ஐரோப்பிய மருந்துகள் நிறுவனமும் மொடர்னாவை சிறுவர்களுக்கு ஏற்ற ஒப்புதல் வழங்கியுள்ளது.

Exit mobile version