பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவியையும், அவரது தந்தையையும், மனைவியின் சகோதரரையும் மற்றும் சிறுமியை வேலைக்கு எடுத்து கொடுத்த தரகர் ஆகிய நால்வரையும் 48 மணிநேரம் விசாரிப்பதற்கு நீதிமன்றம் பொலிசாருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
குறித்த நால்வரையும் பொலிசார் கொழும்ப நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியபோதே நீதவான் குறித்த உத்தவினை பிறப்பித்திருந்தார்.
பொலிஸ் விசாரணைகள் முடிவடைந்த பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை அதாவது ஜூலை 26 அன்று நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹட்டன், டயகம பகுதியை சேர்ந்த 16வயது சிறுமி உயிரிழப்பு மற்றும் அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை குறித்து இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.