ரிஷாத்தின் வீட்டில் பல பெண்கள் துன்புறுத்தல்!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த மலையகத்தை சேர்ந்த 11 யுவதிகள் கடும் வன்முறைக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்தோடு இதில் சிலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உள்ளாக்கப்பட்டமை பொலிஸார் நடாத்திய விசாரணையில் வெளி வந்துள்ளது.

இவ்வாறு தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரிஷாத்தின் வீட்டில் பணிபெண்ணாக அழைத்து வரப்பட்ட யுவதி ஒருவர், கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்தோடு ரிஷாத்தின் உத்தியோக பூர்வ வீட்டில் டயகம பகுதியை சேர்ந்த தற்போது 22 வயதான யுவதி (தனது 16-19 வயது வரை ரிஷாத்தின் வீட்டில் பணிபுரிந்தார்) இதன்போது துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை குரித்து முழுமையான தகவல்கள் கிடைத்ததை அடுத்து, ரிஷாத்தின் மனைவியின் சகோதரன் கைது செய்யப்பட்டார்.

அத்தோடு தன்னை துஷ்பிரயோகம் செய்த அறையினையும் யுவதி அடையாளம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

ரிஷாத் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை, மனைவியின் சகோதரன், தரகர் ஆகியோர் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்கள்.

சிறுவர்களை பணிபெண்களாக அமர்த்தியமை, துன்புறுத்தியமை, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்க, மேல் மாகாண மகளிர் குழந்தைகள் பிரிவை சேர்ந்தவர்கள் தலைமையில் குழ ஒன்று அமைக்கப்பட்டது.

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபெண்களாக செயற்பட்ட மலையகத்தை சேர்ந்த 11 யுவதிகளிடம் வாக்குமூலம் பெறுவதற்காக இந்த குழு அந்த பகுதிகளிற்கு சென்றுள்ளது.

இப்பொழுது தடுத்து வைக்கப்பட்ட தரகர் பொன்னையாவெ, மலையகத்தை சேர்ந்த 11 பெண்களையும் பணிபெண்களாக அழைத்து வந்துள்ளார்.

அத்தோடு பணிபெண்களை வழங்கி, தரகர் பெருமளவு பணத்தை பெற்றுகொண்டமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத்தின் வீட்டில் பணியாற்றிய 16வயது சிறுமி இஷாலினி சில வாரங்களிற்கு முன்னர் தீ மூட்டி தற்கொலை செய்திருந்தார். அவர் நீண்டகாலமாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை பிரேத பரிசோதனையின் தெரிய வந்துள்ளது.

சிறுமியை 8 மாதங்களாக வீட்டிற்கு செல்ல அனுமதிக்கவில்லை எனவும், ஒரு மாதத்திற்கு மேலாக பெற்றோருக்கு தொலைபேசியில் பேசுவதற்கு கூட அனுமதிக்கவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

ரிஷாத் பதியுதீனின் வீட்டிற்கு பின்னே இருந்த சிறிய தனி அறையில் சிறுமி தங்க வைக்கப்பட்டார். அவ்வறையில் மின்சாரமில்லை. இருவர் படுக்ககூடிய இரும்பு கட்டில் ஒன்று அவ்வறையில் போடப்பட்டிருந்தது. இரவு 10.30க்கு சிறுமியை அறையில் வைத்து கதவு மூடப்பட்டு மறுநாள் காலை 5.30 மணிக்கு அறை திறக்கப்பட்து. இதற்கிடையில், கழிப்பறைக்கு செல்ல கூட அனுமதி அளிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

5 சிறப்பு பொலிஸ் குழுக்கள் இது குறித்த விசாரணைகளை நடத்தி வருகின்றன.

Exit mobile version