கொரோனா தொற்று காரணமாக தற்போது போடப்படும் தடுப்பூசிகளை பெற்று கொள்ளாத அரச ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் அனுகூலங்களை நிறுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
அதாவது தொற்று ஏற்படும் அரச ஊழியருக்கு சம்பளத்துடனான விடுமுறையினை வழங்குவதை ரத்து செய்வது குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு தடுப்பூசி பெறாத அரச ஊழியருக்கு ஏதாவது முறையில் தொற்று ஏற்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தும் போது அரசினால் வழங்கப்படும் தனிப்பட்ட விடுமுறையை குறைப்பது குறித்தும் அரசு அவதானம் செலுத்தியுள்ளது.
தடுப்பூசி பெற்றவர்களது பாதுகாப்பினை தடுப்பூசி பெறாத நபர்களால் இல்லாமல் செய்ய முடியாது.ஆகவே தடுப்பூசி பெறாத நபர்கள் குறித்து எதிர்வரும் நாட்களில் சில தீர்மானங்கள் எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனினும் தடுப்பூசி பெற விரும்பாதவர்களுக்கு பலவந்தமாக தடுப்பூசியினை செலுத்த எவருக்கும் உரிமை இல்லை என பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்தியர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.