கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிகிச்சை அறையினுள் நாக பாம்பு ஒன்று திடீரென நுழைந்தமையினால் ஊழியர்களும், நோயாளிகளும் அச்சத்தில் உறைந்ததாக வைத்தியசாலையின் தலைமை தாதியர் புஷ்பா ரம்யானி டிசொய்சா தெரிவித்துள்ளார்.
எனினும் இதன்போது பாம்பு எவரையும் கடிப்பதற்கு முன் வைத்தியசாலை பாதுகாப்பு அதிகாரிகள், நாகபாம்பைப் பிடித்து போத்தலில் அடைத்தனர்.
அந்த பாம்பு, சுவாசிப்பதற்காக போத்தலில் ஓட்டை இடப்பட்டது.
இதன்பின் விலங்குகளுடன் தொடர்புபட்ட இடங்களிற்கு தெரிவித்த போதும் எவரும் வராமையினால், தூரப்பகுதியில் உள்ள காட்டில் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிகிச்சை அறைக்குள் நாகபாம்பு வந்தது இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது.