யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர் கடந்த புதன்கிழமை (14) யாழ்ப்பாண கல்வி திணைக்களத்தில் இடம்பெற்ற அதிபர்களிற்கான கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் அதில் 50பேர் பங்குபற்றியனர் எனவும் தெரியவருகிறது.
இதனைவிட தனது பாடசாலையில் வகுப்புகளை நடாத்தியமையும் பெற்றோர் சந்திப்பு ஒன்றையும் நடாத்தியுள்ளார்.
அத்தோடு, உரும்பிராயில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவிலும் கலந்துகொண்டுள்ளார்.
இவருடன் தொடர்பில் இருந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டனர். அத்தோடு இவரது வீட்டாரும் தனிமைபடுத்தப்பட்டனர்.
எனினும் இதுவரை கூட்டத்தில் பங்குபற்றிய அதிபர்கள் கல்வி அதிகாரிகள் தனிமைபடுத்தப்படவில்லை.
குறித்த அதிபரது பாடசாலையில் 60 வயதிற்கு அதிகமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது. அத்தோடு இம்மாதம் 9ம் திகதி குறித்த அதிபர் 1வது தடுப்பூசி ஏற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது