விசாரணை திசை திருப்பப்படுகிறது! சிறுமியின் தாய் ஆதங்கம்!

தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலை புரிந்த சிறுமி குறித்த விசாரணைகள் திசை திருப்பப்படுவதாக சிறுமியின் தாய் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமது பிள்ளையை வேலைக்காகவே அங்கு அனுப்பி வைத்தோம். எனினும் பிள்ளையின் உடல் சவபெட்டியிலேயே எமக்கு கிடைத்தது.

பிள்ளைக்கு என்ன நடந்தது குறித்து பொலிசார் விசாரணைகளை நடத்த வேண்டும். எனினும் அவர்கள் அவ்வாறு செய்யாமல் இங்கு வந்து பொலிசார் எழுப்பும் கேள்விகளை எம்மால் பொறுத்துகொள்ள முடியவில்லை.

பிள்ளைக்கு இங்கு வைத்து என்ன ஆனது, பிள்ளை இங்கு வேறு யாருடனும் தொடர்பில் இருந்தாரா? எனும் கேள்விகளை எழுப்புகிறார்கள்.

நாட்டின் முக்கிய இடங்களில் இருப்பவர்களே இவ்வாறு செயற்படுபடுகின்றார்கள் என்றால், எத்தனை சம்பவங்கள் வெளியிலே தெரியாமல் இடம் பெற்று இருக்கும்?

எனது பிள்ளைக்கு நியாயம் கிடைக்கும் வரை சொட்டு கண்ணீர்கூட சிந்தமாட்டேன் என எனது பிள்ளையின் உடல் மீது சத்தியம் செய்திருக்கிறேன் என சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

சுருக்க செய்தி

ரிஷாத் பதியுதினின் வீட்டில் பணிபுரிந்த டயகம பகுதியை சேர்ந்த ஹிசாலினி எனும் சிறுமி தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் சிறுமி நீண்ட நாட்களாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்தது.

Exit mobile version