கொரோனா பரவல் காரணமாக தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலை கல்வி நடவடிக்கைகளை அடுத்த மாதம் தொடக்கம் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்கப்படுகிறது.
இந்நிலையில் அனைத்த அதிபர், ஆசிரியர்களையும் எதிர்வரும் மாதத்தில் இருந்து பணிக்கு அழைக்ப்பதற்கென எதிர்பார்க்க படுவதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களை கொண்ட கொண்ட பாடசாலைகளை முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பாட்டு அதனை அதனை சிறிது சிறிதாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான திட்டங்களை தயாரிப்பதற்காக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை அழைக்க கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது.
நாட்டில் உள்ள ஆசிரியர்கள், அதிபர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு வெற்றிகரமாக முன்னெடுக்க படுகின்றமையால் அவர்களை பாடசாலைகளுக்கு அழைப்பதால் ஏற்படும் ஆபத்து குறைவாக உள்ளதென அவர் குறிப்பிட்டார்.